மூக்குமுட்ட சரக்கடித்துவிட்டு சாப்பிட்டு உறங்கிய பெயிண்டர் பரிதாப மரணம்; திருப்பூரில் சோகம்.!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில், ராமலிங்கபுரம் பகுதியில் வசித்து வருபவர் சந்திரகுமார் (வயது 29). இவர் வாடகை வீட்டில் தனியே வசித்து வருகிறார். பெயிண்டிங் தொழிலாளி ஆவார்.
மதுபானம் அருந்தும் பழக்கத்தை கொண்ட சந்திரகுமார், சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக மதுகுடித்து, உணவு சாப்பிட்டு தனது வீட்டு முன்பு படுத்து உறங்கியுள்ளார்.
மறுநாள் காலையில் எவ்வித அசைவும் இன்றி கிடைக்க, அக்கம் பக்கத்தினர் அவரை எழுப்பி பார்த்துள்ளனர். ஆனால், எவ்வித பலனும் இல்லை.
இதனையடுத்து, வெள்ளகோவில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, அவர்கள் வந்து சோதனை செய்தபோது சந்திரகுமார் உயிரிழந்தது அம்பலமானது.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விசாரணையும் நடந்து வருகிறது.