நடுக்கடலில் திருமணம்.! திருமண உறவிலிருந்து வெளியேறும் திரெளபதி நடிகை!!
கடன் தொல்லையால் சோகம்.. விடுதியில் வாலிபர் விபரீத முடிவு..!
கடன் தொல்லையால் சோகம்.. விடுதியில் வாலிபர் விபரீத முடிவு..!

கடன் தொல்லையால் பாதிக்கப்பட்ட பனியின் நிறுவன தொழிலாளி, தனியார் தங்கும் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள தங்கும் விடுதியில், கடந்த 9 ஆம் தேதி அறையெடுத்து ஒருநபர் தங்கி இருந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் மாலை வரை தனது அறையின் கதவுகளை திறக்காமல் இருந்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள், ஜன்னல் வழியாக பார்க்கையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. பின்னர், இதுகுறித்து விடுதி ஊழியர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பந்தப்பட்டவர் குறித்து விசாரணை செய்கையில், அவர் திருப்பூர் இடுவம்பாளையம் பகுதியை சார்ந்த தினேஷ் (வயது 32) என்பது தெரியவந்தது.
பனியன் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்த தினேஷ், அவ்போது விடுதியில் அறையெடுத்து தங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த சில நாட்களாகவே கடன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருந்த தினேஷ், விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.