தமிழகத்தையே அதிரவைத்த, திருப்பூர் ஞாயிற்றுக்கிழமை கொலைகள்.. பகீர் சம்பவங்கள்..!



Tiruppur District Last 3 Weeks Sunday Murders

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் நெடுஞ்சாலையில், கழிவுநீர் கால்வாயில் கடந்த பிப். 7 ஆம் தேதி சூட்கேசில் இருந்து இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை செய்தபோது, அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண் நேகாவை, குடும்ப தகராறில் கானவர் கொலை செய்து நண்பரின் உதவியுடன் உடலை சூட்கேசில் மறைத்து சாலையில் வீசியது அம்பலமானது. இந்த சம்பவம் கடந்த பிப்.6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடந்தது. மனைவி நேகாவை கொலை செய்த கணவரை காவல் துறையினர் தேடி வரும் நிலையில், அவருக்கு உதவி செய்த நண்பர் ஜெயலால் சவ்ராவை ஓசூரில் வைத்து காவல் துறையினர் கைது செய்திருந்தனர். 

கடந்த பிப். 14 ஆம் தேதி திருப்பூர் கருக்காத்தோட்டம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனம் அருகே, சதீஷ் என்ற வாலிபர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். மதுபானம் அருந்தும் தகராறில் 7 பேர் கொண்ட கும்பலால் சதீஷ் படுகொலை செய்யப்பட்டது விசாரணையில் அம்பலமாகவே, கொலையாளிகள் 7 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர். இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிப். 13 ஆம் தேதி இரவில் நடைபெற்றது. 

Tiruppur

இந்த நிலையில், நேற்று (பிப். 20 ஞாயிற்றுக்கிழமை) திருப்பூர் பழைய மார்க்கெட் வளாகத்தில், ஸ்ரீதர் என்ற இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளுக்கு அதிகாரிகள் வலைவீசியுள்ளனர். கடந்த 3 வாரமாகவே ஞாயிற்றுக்கிழமை தினங்களில் திருப்பூரில் அரங்கேறிய அடுத்தடுத்த கொலை சம்பவங்கள் அம்மாவட்ட மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமையில் தொழிலாளர்கள் ஓய்வெடுக்க, குடும்பத்துடன் நேரத்தை செலவிட தொழில் நிறுவனங்களும் விடுமுறை வழங்குகிறது. 

அப்போது, மதுபானத்திற்கு அடிமையான நபர்கள் வெளி இடங்களுக்கு புறப்பட்டு சென்று மதுபானம் அருந்துவது, ரகளையில் ஈடுபடுவது, நண்பர்களுக்குள் தகராறு ஏற்படுவது என சண்டை இறுதியில் கொலையில் முடிவடைகிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமை காவல் துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என அம்மாவட்ட மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.