மழைக்காக சாவடிக்குள் ஒதுங்கியபோது பரிதாபம்; கட்டிடம் இடிந்து விழுந்து 3 இளைஞர்கள் பரிதாப பலி.!



Tiruppur 3 Youngsters Died Building Collapse 

 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொழுமம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கவுதம், முரளி ராஜா, மணிகண்டன். இவர்கள் மூவரும் இன்று அப்பகுதியில் உள்ள சாவடியில் மழைக்காக ஒதுங்கி இருக்கின்றனர். 

அப்போது, திடீரென சாவடியின் மேற்கூரை இடிந்து விழவே, இடிபாடுகளில் சிக்கிய 3 இளைஞர்களும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் மற்றும் காவல் துறையினர், உள்ளூர் மக்கள் உதவியுடன் இளைஞர்களை மீட்டனர். 

இவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டபோது, மூவரும் பலியானது உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.