அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
"மீண்டும் மீண்டுமா... " நெல்லையில் மாணவருக்கு அரிவாள் வெட்டு.!! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போலீசார்.!!
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகே, உள்ள டவுன் பகுதியில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளுக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த மோதல் இரு சமூகங்களுக்கிடையே ஏற்பட்டது என்று கூறப்படும் செய்திகள் முற்றிலும் தவறானவை என காவல்துறை தெளிவுபடுத்துள்ளது.
நேற்று திருநெல்வேலி சந்திப்பு, டவுன் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அதில் ஒரு மாணவனை மற்றொரு மாணவன் அரிவாளால் வெட்டியுள்ளான். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அடிபட்ட மாணவனை மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி வந்த வேலையில் இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட ஜாதி பிரச்சனை தான் இதற்கு காரணம் என சமூக வலைத்தளங்களில் பரவியது. இதற்கு காவல்துறை விளக்கமளித்துள்ளது.

உண்மையில் தனிப்பட்ட காரணங்களுக்காக மாணவர்கள் மோதி கொண்டதாகவும், இதற்கு சமூக ரீதியான எந்த காரணமும் இல்லை என் காவல்துறை தெரிவித்துள்ளது. சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் நோக்கத்தில் சம்பவத்தை மிகைப் படுத்தி செய்திகள் வெளியிடுவதை தவிர்க்குமாறு சமூகப் பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டும் என ஊடகங்களுக்கு பொதுமக்களுக்கும் காவல்துறை வேண்டுதல் விடுத்துள்ளது.
இதையும் படிங்க: போதையில் அட்ராசிட்டி செய்த இளைஞன்.. வெளுத்து எடுத்த பொதுமக்கள்.!
இதையும் படிங்க: "பரிகாரத்தால் வந்த வினை..." 16 வயது சிறுவன் படுகொலை.!! தாத்தா கைது.!!