உடலில் மறைத்து வைத்த தங்க நகைகளுடன் சிக்கிய மலேசிய பயணிகள்... சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

உடலில் மறைத்து வைத்த தங்க நகைகளுடன் சிக்கிய மலேசிய பயணிகள்... சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!



tiruchrapalli-international-airport-customes-seized-mor

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் 72.73  லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தங்கம் துபாய் மற்றும் மலேசியாவில் இருந்து வந்த பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு துபாய் மலேசியா சிங்கப்பூர் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் இருந்து சர்வதேச விமானங்கள் வந்து செல்கின்றன. இதன் மூலம் ஏராளமான பயணிகள் பயன் பெற்று வருகின்றனர். இங்கு அவ்வப்போது நகை கடத்தல் போன்ற சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

trichy

இந்நிலையில் நேற்று மலேசியா தலைநகர் கோலாலம்பூர் மற்றும் ஐக்கிய அரபு நாடான துபாய் ஆகியவற்றில் இருந்து வந்த இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட மூன்று பேரின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கிடமான வகையில் இருக்கவே சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் அவர்களின் உடல் மற்றும் உடைமைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த  ஒரு கிலோ 197 கிராம் அளவுள்ள தங்க நகைகள் மீட்கப்பட்டன. இதன் மதிப்பு இந்திய அளவில் சுமார் 72.73 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் சுங்கத்துறை அதிகாரிகள்.