சென்னையில் இன்று அதிகாலை நில அதிர்வு; நீங்கள் உணர்ந்தீர்களா.!

சென்னையில் இன்று அதிகாலை நில அதிர்வு; நீங்கள் உணர்ந்தீர்களா.!


tiday mornning earth quake in chennai

சென்னையில் இன்று அதிகாலை நில அதிர்வு ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை பலரும் உணர்ந்ததாக தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

சென்னையில் இருந்து 609 கி.மீட்டர் தொலைவில் வங்கக் கடலில் இந்த நில அதிர்வு மையம் கொண்டு இருந்ததாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.9 ரிக்டராக பதிவான இந்த நில அதிர்வு இன்று அதிகாலை 1.30 மணிக்கு ஏற்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.  

எந்தவித உயிர்சேதமோ, பொருள் சேதமோ ஏற்படாத இந்த நில அதிர்வை சென்னை தி,நகர் போன்ற பகுதிகளில் மக்கள் உணர்ந்ததாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

பொதுவாக அந்தமான் நிகோபர் தீவுகளில் இதுபோன்று நில அதிர்வு அடிக்கடி ஏற்படுவது உண்டு. தற்போது சென்னைக்கு அருகே நில அதிர்வு ஏற்பட்டு இருப்பது சென்னை வாசிகளை அச்சம் அடையச் செய்துள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு அறிக்கையின்படி சென்னையில் இருந்து 609 கி.மீட்டர் தொலைவில் வங்கக் கடலுக்குள் 10கி.மீட்டர் ஆழத்தில் இந்த அதிர்வு மையம் கொண்டுள்ளது.  

மீண்டும் இன்று காலை 7 மணிக்கு நில அதிர்வு இருந்ததாக சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டுள்ளனர்.