தமிழகம்

மாப்பிள்ளை வீட்டை பார்க்க சென்ற பெண் வீட்டார்.! திடீரென வெடித்த வேன் டயர்.! 3 பெண்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு.!

Summary:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பெண் ஒருவருக்கு, ராணிப்பேட்டை மாவட்டம் காரை பகுதியை சேர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பெண் ஒருவருக்கு, ராணிப்பேட்டை மாவட்டம் காரை பகுதியை சேர்ந்த இளைஞருடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் பெண் வீட்டார் மாப்பிள்ளை வீடு பார்ப்பதற்காக மினி வேனில் சென்றுள்ளனர்.

அவர்கள் மாப்பிள்ளை வீட்டை பார்த்துவிட்டு நேற்று முன்தினம் மாலை நேரத்தில் மீண்டும் மினிவேனிலேயே ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். அப்போது, காட்பாடி அருகேயுள்ள திருவலம் கூட்டுரோட்டில் சென்றுகொண்டிருக்கும்பொழுது, திடீரென அவர்கள் சென்ற மினிவேனின் பின்புற டயர் வெடித்துள்ளது.

 மினி வேன் வேகமாக சென்றுகொண்டிருக்கும்பொழுது டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த அந்த வேன் சாலையில் கவிழ்ந்துள்ளது. அங்கு நடந்த விபத்தில் வேன் ஓட்டுநர் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்தில் சிக்கியவர்களை திருவலம் போலீசார் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூன்று பெண்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement