
three subject only public exam for 5'th and 8'th
5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொது தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு மட்டும் தான் பொது தேர்வு நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அண்மையில் அறிவித்திருந்தது.
திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான 62 - வது குடியரசு தின தடகளப் போட்டிகள் இன்று துவங்கியது. அங்கு நடைபெறும் தடகளப் போட்டிகளை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். இன்று முதல் வரும் 23ஆம் தேதி வரை 6 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் மாநிலம் முழுவதும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.
அங்கு பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 'எல்லா துறைகளிலும் தமிழ்நாடு முன்னிலை வகித்து வருகிறது. 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொது தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு மட்டும் தான் பொது தேர்வு நடைபெறும். இந்த பொது தேர்வு மாணவர்களின் கல்வி திறனை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் அச்சப்பட வேண்டாம் என தெரிவித்தார்.
Advertisement
Advertisement