பள்ளிக்குச் சென்ற 3 மாணவிகள் மாலை வீட்டுக்கு வரல..! 5 மணி நேர அதிரடி ஆபரேஷனில் களம் இறக்கிய போலீஸ்கு காத்திருந்த அதிர்ச்சி...! பகீர் பின்னணி..!!!
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே பள்ளிக்குச் சென்ற மூன்று மாணவிகள் மாயமான நிலையில், போலீசார் அவர்களைச் சென்னையில் பத்திரமாக மீட்டுள்ளனர். அக்டோபர் 26ஆம் தேதி வீட்டிலிருந்து பள்ளிக்குச் சென்ற மாணவிகள் மாலையில் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் கவலையடைந்தனர். இதையடுத்து தேடுதல் பணியில் இறங்கிய போலீசார், 5 மணி நேரங்களுக்குள் அவர்களைக் கண்டுபிடித்தனர்.
பள்ளிக்குச் சென்ற மாணவிகள் வீடு திரும்பவில்லை
தண்டராம்பட்டு அருகே உள்ள தரடாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மகாலட்சுமி, மகேஸ்வரி ஆகிய சகோதரிகளும், அவர்களது உறவினரான நித்யாவும் தண்டராம்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களது பெற்றோர் கேரளாவில் கூலி வேலை செய்து வருவதால், மூவரும் பாட்டியின் பராமரிப்பில் வாடகை வீட்டில் தங்கிப் படித்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க: பிறந்தநாள் கேக்கில் இருக்கும் மர்மம்... செஞ்சி சிறுமி வழக்கில் சிக்கிய மாப்பிள்ளை தம்பி...! பல கோணங்களில் பரபரப்பு விசாரணை..!!!
கடந்த அக்டோபர் 26ஆம் தேதி வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற மூவரும் மாலையாகியும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினரும் உறவினர்களும் பல இடங்களில் தேடியும் அவர்களைப் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. இதையடுத்து காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, மாணவிகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
சென்னை மெரினாவுக்குச் சென்ற மாணவிகள்
விசாரணையில், மாயமான மூன்று மாணவிகளும் சென்னைக்குச் சென்று மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களைச் சுற்றிப் பார்த்ததாகத் தெரியவந்தது. பின்னர், கேளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அவர்கள் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மாணவிகளை அடையாளம் கண்டு மீட்டனர்.
மாணவிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் தண்டராம்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னைக்குச் சென்றதற்கான காரணம் குறித்து விசாரணை
மூன்று மாணவிகளும் எதற்காகச் சென்னைக்குச் சென்றனர், வீட்டை விட்டுப் புறப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மாணவிகள் பத்திரமாக மீட்கப்பட்டதால் குடும்பத்தினர் நிம்மதியடைந்துள்ளனர். விரைவாகச் செயல்பட்டு அவர்களைக் கண்டுபிடித்த போலீசாருக்கு பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 10 நாட்கள் ஆகிட்டு...! 7 வயது சிறுமி மாயமான வழக்கில்... செல்போன் சிக்னல் காட்டிய ரகசியம்..! போலீஸ் வேட்டையில் அதிரடி திருப்பம்..!!!