புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
18 வயது பூர்த்தி அடையாமலேயே திருமணம்...அடுத்த பத்து மாதத்திலேயே இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம்.!
விருதுநகர் மாவட்டம் ஆமத்தூரைச் சேர்ந்தவர் முத்துபாண்டியன். இவருக்கும் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த ஜெயசக்தி என்ற பெண்ணுக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமணம் நடைப்பெற்றுள்ளது. ஜெயசக்தி திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு வந்த பிறகு தான் முத்துபாண்டிக்கு அதே பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்கனவே பழக்கம் இருந்ததும் தெரியவந்துள்ளது.
அதனையடுத்து ஜெயசக்தி முத்துபாண்டியை கண்டித்துள்ளார். ஆனாலும், முத்துப்பாண்டி காதலியிடம் தொடந்து பழகி வந்ததாக கூறப்படுகிறது.இதனால், ஜெயசக்தி முத்துபாண்டியை குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் விசாரணையில், முத்துபாண்டியை அழைத்து எச்சரித்துள்ளனர்.
மேலும் ஜெயசக்திக்கு 18 வயது பூர்த்தியாகமலே திருமணம் நடைப்பெற்றது தெரியவந்துள்ளது. அதனால் 18 வயது நிரம்பும் வரை ஜெயசக்தி பெற்றோர் வீட்டில் தான் வாழ வேண்டும் என போலீசார் கூறியுள்ளனர். எனவே ஜெயசக்தி தனது பெற்றோர் வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில் ஒரு நாள் ஜெயசக்தியின் ஊர் திருவிழாவிற்கு முத்துபாண்டி வந்துள்ளார். அப்போது அந்த ஊரில் இருந்த வாலிபர்கள் சிலர், முத்துபாண்டிக்கு கேட்கும்படி ஜெயசக்தியின் நடத்தையை பற்றி அவதூறாக பேசியுள்ளனர். இதனால், ஜெயசக்தி மீது முத்துபாண்டிக்கு கடும் கோபம் ஏற்பட்டது.
மேலும், மனைவியை தீர்த்துக்கட்டவும் அவர் முடிவு செய்தார். அதற்காக, தனது உறவினர்களான ஹரிஷ், அருண் ஆகியோரை வரவழைத்து ஜெயசக்தியை காட்டு பகுதிக்கு வரவழைத்து கொலை செய்துள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.