தமிழகத்தை பதறவைக்கும் கொடூர சம்பவம்.. இளைஞர் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை..!

தமிழகத்தை பதறவைக்கும் கொடூர சம்பவம்.. இளைஞர் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை..!


Thoothukudi Youngster Murder by Gang VCK President Condemn 

 

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூர் புளியங்குளம் பகுதியில் வசித்து வருபவர் முத்து பெருமாள். அங்குள்ள கருங்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வருகிறார். 

நேற்று அதிகாலை நேரத்தில் திருநெல்வேலி, ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் உள்ள சிவந்திபட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது. 

இந்த சம்பவத்தில் பெருமாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். காவல்துறையினர் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது சாதி ரீதியான கொலை என்று சுட்டிக்காட்டியுள்ள விசிக தலைவர் திருமாவளவன் தனது கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.