"பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை..." பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை.!!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகப்பட்ட இளம் பெண் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், பழனியப்பபுரத்தை சேர்ந்த பத்மநாதன் மகள் சுதா (19). இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த இசக்கி முத்து என்பவரின் மகனான இசக்கிராஜாவால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் இசக்கி ராஜா மீது திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தனர்.

இதற்கடுத்து போலீசார் விசாரணை நடத்தி இசக்கி ராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி இசக்கி ராஜாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் இசக்கி ராஜாவின் குடும்பத்தால் தனக்கு ஏதும் அசம்பாவிதம் நடந்து விடுமோ.? என பயந்த சுதா நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதையும் படிங்க: 6 வயது சிறுவன் பலாத்காரம்... 31 வயது நபருக்கு இரட்டை ஆயுள்.!! போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்ததுள்ளனர். இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது
இதையும் படிங்க: மனநலம் பாதித்த சிறுமி பாலியல் வன்புணர்வு... 62 வயது கிழவனின் வெறி செயல்.!!