இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது, அவர்கள் ஆதிக்கத்தில் இல்லாத தமிழகத்தின் ஒரே மாவட்டம்!.

சங்க காலத்தில் சோழநாட்டிற்கும் பாண்டிய நாட்டிற்கும் எல்லையாக இருந்துள்ளது தற்போதைய
புதுக்கோட்டை மாவட்டம். தமிழகத்திலே மிகப்பெரிய சமஸ்தானம், புதுக்கோட்டை சமஸ்தானம். தமிழகத்தை ஆண்ட அனைத்து வம்ச மன்னர்களுக்கும் போர்க்களமாக விளங்கியுள்ளது புதுக்கோட்டை பகுதி.
சோழர், பாண்டியர், பல்லவர், நாயக்கர், முத்தரையர், வேளீர், தொண்டைமான், வாணதிரையர், கொடும்புராயர் ஆகிய அனைத்து வம்சாவழிகளின் ஆட்சியையும் கண்டது புதுக்கோட்டை சமஸ்தானம்.
1948 வரை சுமார் 300 ஆண்டுகள் தனியரசாக விளங்கியதும் புதுக்கோட்டை ஒன்றே.
புதுக்கோட்டை சமஸ்தானம்,1947 ஆகஸ்ட்டு 15 வரை பிரிட்டீஷ் இந்திய ஆளுகைக்கு உட்படாத தனி நாடாக இருந்தது.
இவர்களுக்கென்று தனி ஆட்சி, தனி சட்டம், தனி நாணயம் என தனி ராஜ்யம் நடத்தி வந்தனர்.
இந்தியக் காசை ரூபாய் என கூறுவது போல புதுக்கோட்டை சமஸ்தானத்தின் காசின் பெயர் அம்மன் காசு என்று அழைக்கபட்டது.
புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள், புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு சொந்தமான ஒரு நாணயத்தை வெளியிட்டுக்கொண்டார்கள். அதன் பெயர் அம்மன் காசு. அதன் ஒருபுறத்தில் தொண்டைமான்களின் வழிபாட்டு தெய்வமாகிய பிரகதாம்பாளின் உருவம் இருக்கும்.
பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பைசாவுக்கு மூன்று அம்மன் காசுகள் சமம். தொண்டைமான் மன்னர்களின் முடியாட்சியில் இருந்த புதுக்கோட்டை சமஸ்தானத்தின் தனியரசு, இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 3.3.1948ல் ஒன்றுபட்ட இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.