"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
பாஜக தலைவர் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு; மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல்..!
திருவெற்றியூர் பகுதியின் பாஜக மண்டல் தலைவர் வீடு மீது கல்வீசி மர்ம நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது.
சென்னையில் உள்ள திருவெற்றியூர், வடக்கு மாவட்ட வீதியில் வசித்து வருபவர் ரவி. இவர் பாஜக மண்டல் தலைவர் பொறுப்பில் இருக்கிறார். நேற்று இவரது வீட்டின் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் பாஜக பிரமுகரின் வீட்டு ஜன்னல் கண்ணாடி உடைந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக ரவி திருவெற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த காவல் துறையினர், நிகழ்விடத்தில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆராய்ந்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.