காதல் திருமணம் முடிந்த 8 மாதத்தில் தாய் வீடு வந்த தங்கை; முன்விரோதத்தில் நடந்த படுபயங்கரம்.!



Thiruvarur Man Killed by 6 Man Gang 

 

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், மாயனூர் பகுதியில் வசித்து வருபவர் ரோபர்ட் (40). இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இதே பகுதியில் வசித்து வந்த இளம்பெண் சுபலட்சுமி. இருவரும் காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர். 

8 மாதம் இருவரும் ஒன்றாக குடித்தனம் நடத்தி மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடங்கிய நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக திடீரென பிரிந்தனர். பிரிவுக்கு பின் சுபலட்சுமி தனது தாயின் வீட்டில் வசித்து வருகிறார். இந்த விஷயம் குறித்து ரோபர்ட் - சுபலட்சுமியின் அண்ணன் சிவநேசன் இடையே மோதல், முன்விரோதம் இருந்துள்ளது.

இதையும் படிங்க: வயிற்றுவலி, மனஅழுத்ததால் விபரீதம்; 35 வயது பெண் இரயில் முன் பாய்ந்து தற்கொலை.!

thiruvarur

வாக்குவாதம் கொலையில் முடிந்தது

இதனிடையே, இன்று காலை மாயனூரை சேர்ந்த ஒருவரின் இறப்புக்கு ப்ளக்ஸ் பேனர் வைக்கும் பணியில் சிவநேசன் மற்றும் அவனது நண்பர் கோபி உட்பட 6 பேர் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது, அவ்வழியே சென்ற ரோபர்ட் - சிவநேசன் இடையே வாக்குவாதம் உண்டாகியது.

இந்த வாக்குவாதத்தில் கைகலப்பு ஏற்பட, இருவரையும் அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின் சிறிது நேரம் கழித்து றொபர்ட்டிடம் தகராறு ஏற்பட, ஆத்திரத்தில் ரோபர்ட்டை சிவநேசன் மற்றும் அவரின் 6 நண்பர்கள், தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து தப்பிச் சென்றனர். 

இந்த சம்பவத்தில் ரோபர்ட் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட, தகவல் அறிந்த காவல்துறையினர் ரோபர்ட்டின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழகுப்பது செய்து சிவநேசன், கோபி உட்பட 6 பேரை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.

இதையும் படிங்க: வேலைக்கு ஏன் வரல? கேள்வி கேட்ட மேலாளர் சுத்தியால் அடித்தே கொலை.. சென்னையில் பயங்கரம்.!