நகைக்காக மூதாட்டி கொலையா?.. சந்தேகத்தை கிளப்பும் மர்ம மரணம்.. உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

நகைக்காக மூதாட்டி கொலையா?.. சந்தேகத்தை கிளப்பும் மர்ம மரணம்.. உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.!


Thiruvallur Uthukottai Women Mystery Death

 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டை, கொல்லப்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் எல்லம்மாள் (வயது 75). இவர் கணவரை இழந்து தனியே வசித்து வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல சாப்பிட்டுவிட்டு அவர் உறங்கிய நிலையில், மீண்டும் மறுநாள் காலையில் கதவு திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், எல்லம்மாளின் மகள் ஜெயலட்சுமிக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் வந்து பார்க்கையில் எல்லம்மாள் பிணமாக இருந்துள்ளார். அவர் இயற்கையாக இறந்திருக்கலாம் என இறுதி சடங்குக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

thiruvallur

அப்போது, அவரின் கழுத்தில் நகக்கீறல், காதில் இருந்த ஒரு கம்மல் மாயமானது அம்பலமானது. இதனையடுத்து, இந்த விஷயம் தொடர்பாக பொன்னாலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் எல்லம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

முதற்கட்ட விசாரணையில் எல்லம்மாளின் ஒருகாதில் உள்ள கம்மல் மட்டுமே மாயமாகி இருந்தது. மற்றொரு கம்மல், மூக்குத்தி, தங்க செயின் போன்றவை அப்படியே இருந்துள்ளது. இதனால் அவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கருதி விசாரணை நடந்து வருகிறது.