தமிழகம்

30 வருடமாக என்னை குழந்தைபோல பார்த்த கணவர் இறந்துவிட்டாரே - பெண் எடுத்த முடிவால் சோகம்.!

Summary:

30 வருடமாக என்னை குழந்தைபோல பார்த்த கணவர் இறந்துவிட்டாரே - பெண் எடுத்த முடிவால் சோகம்.!

குழந்தைப்பேறு இல்லாத தம்பதியில் கணவர் உயிரிழந்ததால் மனவருத்தத்துடன் இருந்து வந்த பெண்மணி, தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி, வேலஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் நாகசாமி (வயது 51). இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி மேகலா (வயது 47). இந்த தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து 30 வருடங்கள் ஆகிறது. தற்போது வரை குழந்தைப்பேறு இல்லை.

இந்நிலையில், கடந்த வருடம் டிசம்பர் 21 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு நாகசாமி உயிரிழந்துவிடவே, அவரின் மனைவி மேகலா மிகுந்த மனவிரக்தியில் இருந்து வந்துள்ளார். கணவருடன் நாமும் சென்றுவிடலாம் என்ற விபரீத முடிவெடுத்த பெண்மணி, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார். 

அவரின் அலறல் சத்தம் கேட்டு சென்று அவரை காப்பாற்றிய அக்கம் பக்கத்தினர், திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று உயிரிழந்தார். 


Advertisement