பணியின் போது துப்புரவு பணியாளருக்கு நேர்ந்த சோகம்.. டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பரிதாப பலி.!

பணியின் போது துப்புரவு பணியாளருக்கு நேர்ந்த சோகம்.. டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பரிதாப பலி.!


Thiruvallur Sanitary Worker Woman Died Accident Travel Tractor

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏகாட்டூர் கிராமம், அம்பேத்கார் தெருவை சார்ந்தவர் பழனி. இவரது மனைவி வெண்ணலா (வயது 42). இவர் ஆவடி மாநகராட்சியில் சுகாதார பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், வழக்கம்போல வெண்ணிலா நேற்று காலை 8.30 மணிக்கு பணிக்கு சென்றுள்ளார். 

பின்னர், திருமுல்லைவாயல் பகுதியில் குப்பைகளை சேகரிக்கும் பணிக்காக டிராக்டரில் ஓட்டுநர் அருகேயுள்ள இருக்கையில் அமர்ந்து பயணித்துள்ளார். டிராக்டரை திருத்தணி ராமாபுரம் பகுதியை சார்ந்த பிரகாஷ் (வயது 32) என்பவர் இயக்கியுள்ளார். திருமுல்லைவாயல் சோழம்பேடு அருகே டிராக்டர் சென்றுகொண்டு இருக்கையில், வெண்ணிலா திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். 

thiruvallur

டிராக்டர் வேகமாக சென்றுகொண்டு இருந்த நிலையில், கீழே விழுந்த வெண்ணிலா மீது டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியுள்ளது. இதனால் படுகாயமடைந்த வெண்ணிலா மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட பிற வாகன ஓட்டிகள், அம்பத்தூர் தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். வெண்ணிலாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு துறையினர் வழக்குப்பதிவு செய்து, வெண்ணிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஓட்டுநர் பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.