காரக்குழம்பால் உருவான கலவரம்.. அக்கப்போர் சம்பவத்தால் தம்பி வெட்டிக்கொலை.!Thiruvallur Kavaraipettai Brother Kills Younger Brother Kara Kulambu Issue

அண்டைவீட்டில் காரக்குழம்பு வாங்கி சாப்பிட்ட தகராறில், அண்ணன் தம்பியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கவரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் சென்ட்ரிங் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது அண்ணன் சுப்பிரமணி. இவர் கறிக்கடை நடத்தி வருகிறார். இவர்கள் அனைவரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார்கள். அண்ணன் - தம்பி இருவருக்கும் மதுபானம் அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. 

இருவரும் நேற்று நேற்று மதுபோதையில் இருந்த நிலையில், அண்டை வீட்டில் காரக்குழம்பு வாங்கி சுப்பிரமணி சாப்பிட்டுள்ளார். தம்பி ரமேஷ் அண்ணன் பக்கத்து வீட்டில் வைக்கப்பட்ட குழம்பை ஊற்றி சாப்பிடுவதை கண்டு கொதித்தெழுந்து, "பக்கத்து வீட்டுல காரக்குழம்பு வாங்கி சாப்பிடுற.. வெட்கமா இல்லை?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

thiruvallur

இதனால் அண்ணன் - தம்பி இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், போதையில் இருந்த சுப்பிரமணி வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து வந்து தம்பியின் தலையை வெட்டி இருக்கிறார். பின்னர், மதுபோதையில் அப்படியே படுத்து உறங்கிய நிலையில், ரமேஷின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஆனால், ரமேஷ் செல்லும் வழியிலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கவரைப்பேட்டை காவல் துறையினர், சுப்பிரமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.