BREAKING: போடு வெடிய....விஜய்யின் தவெக கட்சிக்கு விசில் சின்னம்! தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியலில் புதிய நகர்வுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணையம் கட்சிக்கு அதிகாரப்பூர்வமாக சின்னம் ஒதுக்கியுள்ளதால், அரசியல் களத்தில் தவெக புதிய வேகத்தைப் பெற்றுள்ளது.
‘விசில்’ சின்னம் ஒதுக்கீடு
பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம், பொதுச் சின்னம் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தது. அதன்பேரில், 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: BREAKING: செம... போடு வெடிய! விஜய் கட்சியின் சின்னம் இதுதான்...! சற்றுமுன் தேர்தல் ஆணையம் அதிரடி.! யாரும் எதிர்பார்க்காத சின்னம்மா இருக்கே!
விஜய் எடுத்த முடிவு
ஏற்கனவே வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக நடிகர் விஜய் அறிவித்திருந்த நிலையில், தற்போது நிரந்தரச் சின்னம் கிடைத்தது கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தலைமையிலான இந்த அரசியல் பயணம் புதிய கட்டத்தை எட்டியுள்ளதாக ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தேர்தல் பிரச்சாரம் தீவிரம்
இனி வரும் காலங்களில் ‘விசில்’ சின்னத்தை முன்வைத்து தவெக தனது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிராமம் முதல் நகரம் வரை கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
2026 தேர்தல் அரசியல் களத்தில் விஜய் தலைமையிலான தவெக எவ்வாறு செயல்படும் என்பதை அனைவரும் ஆர்வமாக எதிர்பார்க்கும் நிலையில், ‘விசில்’ சின்னம் கட்சியின் அடையாளமாக மக்களிடம் வலுவாக பதியுமா என்பதும் முக்கிய கேள்வியாக எழுந்துள்ளது.