வரைபடம் வரைந்து நெகிழ்ந்த சிறுமி.. தாய் திட்டியதால் மனமுடைந்து துயரம்.. கண்ணீர் சோகம்.!



thiruvallur-girl-conduct-suicide

படிக்காமல் வீட்டில் வரைபடம் வரைந்து கொண்டிருந்த சிறுமியை, தாய் திட்டியதால் அவர் தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவேற்காடு அடுத்த சின்ன கோலடி பகுதியில் வசித்து வருபவர் கணேசன். இவரது மகள் ஜனனி (வயது 11). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.

இந்த நிலையில், சிறுமி கடந்த சில நாட்களாக படிக்காமல் வீட்டில் வரைபடம் வரைந்து கொண்டு இருந்துள்ளார். இதனால் மிகவும் கோபமுற்ற தாய் அவரை திட்டிய நிலையில், மனமுடைந்த சிறுமி தனிமையில் இருந்து வந்துள்ளார்.

மேலும், ஒரு கட்டத்தில் ஜனனி தற்கொலை செய்து கொள்ளலாம் என எண்ணி, தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை கண்ட அவரது பெற்றோர் உடனடியாக சிறுமியை மீட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். 

thiruvallur

ஆனால், சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பின் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரியவர, சம்பவ இடத்திற்கு விரைந்த திருவேற்காடு காவல்துறையினர் சிறுமியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி, விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில், சிறுமி தாய் திட்டியதால் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதனால் காவல்துறையினர், 'பெற்றோர்கள் கூறுவது அனைத்தையும் குழந்தைகள் தவறென்று எண்ணிவிடக்கூடாது. 

பெற்றோர்கள் எப்பொழுதும் தங்களது நன்மைக்கு தான் கூறுவார்கள் என குழந்தைகள் எண்ணினால், இதுபோன்ற தற்கொலை சம்பவங்கள் தடுக்கப்படும்' என்று வலியுறுத்தியுள்ளனர்.