BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
நர்சிங் வேலைக்கு வந்த இடத்தில் பெண் காட்டிய நெருக்கம்.. லட்சங்களை இழந்த அஞ்சல் அதிகாரி.!
அஞ்சல் அதிகாரியை நிர்வாண வீடியோ எடுத்து பணம் பறிக்க முயன்ற பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் பகுதியில் ஒரு அஞ்சல் அதிகாரியின் தாய் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அந்த தாயை பராமரித்துக் கொள்ள ஒரு பெண்ணை அதிகாரி வேலைக்கு அமர்த்தியுள்ளார். அந்தப் பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு நெருங்கி பழகி இருக்கின்றனர். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த அந்த இளம் பெண் அதிகாரியை நிர்வாணமாக வீடியோ எடுத்துள்ளார்.

மேலும், இந்த வீடியோவை தனது பெண் தோழியுடன் அவர் பகிர்ந்து கொண்டு இருக்கிறார். பின்னர், இருவரும் சேர்ந்து அந்த அதிகாரியிடம் பணம் பறிக்க திட்டம் தீட்டினார்கள். அவர்களது திட்டப்படி அதிகாரியை மிரட்டி 5 லட்சம் பணம் கேட்டுள்ளனர்.
இதையும் படிங்க: "தாத்தா சிப்ஸு கொடுத்து அப்டி பண்ணினாரு மிஸ்" 2-ம் வகுப்பு குழந்தை சொந்த தாத்தாவால் பாலியல் கொடுமை.!
அந்த அதிகாரியும், அவர்களுக்கு பயந்து இரண்டரை லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். பணத்தை கொடுத்ததுடன் நிறுத்தாமல் அப்படியே போலீசுக்கு சென்ற அதிகாரி புகார் கொடுத்துள்ளார். இதில் அந்த பெண்கள் இருவரும் சிக்கிய நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: திண்டுகல்லில் அதிர்ச்சி.! பெற்ற மகனை கொலை செய்த தந்தை.! சிறிய சண்டையால் துடி துடித்து பறிபோன உயிர்.!