13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
ஆன்லைன் கேமில் பணத்தை இழந்த கணவன்.. கடன் தொல்லையால் மணமான ஓராண்டில் இளம்பெண் தற்கொலை.!
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், தென்கரை பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரின் மனைவி மனோன்மணி. தம்பதிகளுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்று முடிந்தது. திருமணத்திற்கு பின் தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
ஆன்லைன் முதலீடு
இதனிடையே, ஆன்லைன் விளையாட்டின் மீது மோகம் கொண்ட முத்துப்பாண்டி, பணத்தை வைத்து முதலீடு செய்து இருக்கிறார். மேலும், மனைவி அணிந்து வந்த 30 சவரன் நகைகளையும் விற்பனை செய்து முதலீடு செய்வதாக இழந்துள்ளார்.
இதையும் படிங்க: காதல் தோல்வியால் விரக்தி; காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவி தற்கொலை செய்த விவகாரத்தில் பகீர் திருப்பம்.!
இதுபோதாதென, உறவினர்களிடமும் ரூ.10 இலட்சம் கடன் வாங்கி விழுந்துள்ளார். இதனால் கணவன் - மனைவி இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், குடும்ப பிரச்சனை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பலனில்லை.
பெண்மணி தற்கொலை
இதனிடையே, விரக்தியின் உச்சத்திற்கு சென்ற மனோன்மணி, வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடன் கொடுத்தவர்கள் பலரும் மனோன்மணியிடம் நெருக்கடியை ஏற்படுத்த, 5 நாட்களுக்கு முன்பு அவர் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அதனை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: வேலூர்: 16 வயது சிறுமி 6 மாத கர்ப்பம்; விசாரணைக்கு பயந்து 23 வயது காதலன் தற்கொலை.!