ரொமான்டிக் வெக்கேஷன் வீடியோவை வெளியிட்ட சூர்யா - ஜோதிகா! அழகிய ஜோடியின் காதல் கவர்ந்த வீடியோ இதோ..
கையை வச்சிதானே அவனோட., கணவனின் சந்தேகத்தால் ஒரே வெட்டு.. இரண்டான சோகம்.!

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரின் கைகளை அரிவாளால் துண்டித்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், கெங்குவார்பட்டி பகுதியை சார்ந்தவர் சின்னமுத்து (வயது 45). இவர் தென்னைமரம் ஈறும் கூலித் தொழிலாளி ஆவார். இவரது மனைவி நாகஜோதி (வயது 40). இருவருக்கும் கடந்த 20 வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இவர்கள் இருவருக்கும் 3 குழந்தைகள் உள்ள நிலையில், நாகஜோதிக்கு மற்றொரு நபருடன் தொடர்பு இருப்பதாக சின்னமுத்துவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவ்வப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதமும் நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்றும் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதத்தின் போது ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற சின்னமுத்து, தனது மனைவி நாகஜோதியின் கைகளை அரிவாளால் வெட்டி இருக்கிறார். இதனால் நாகஜோதியின் வலது கை மணிக்கட்டு துண்டாகி கீழே விழுந்துள்ளது. அக்கம் பக்கத்தினர் நாகஜோதியை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.
நாகஜோதிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேவதானப்பட்டி காவல் துறையினர் கணவர் சின்னமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.