தமிழகம்

கணவனை கைது செய்யவந்த போலீசார்.! ஆடைகளை கழற்றி வீசிய மனைவி! அதிர்ச்சி சம்பவம்.!

Summary:

சட்டவிரோதமாக மதுபானங்களை விற்று வந்த தம்பதியை கைது செய்ய முற்பட்ட போது, ஆடைகளை கழற்றி தப்பிக்க முயன்ற மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னை, பெசன்ட் நகர், ஓடைக் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம். இவர் மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்துவருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு பதுக்கிவைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து ரத்தினத்தை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு வரும்படி அழைத்துள்ளனர்.

ஆனால், ரத்தினத்தின் மனைவி உஷா அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதுமட்டுமின்றி உஷா தன் ஆடைகளை எல்லாம் கழற்றி வீசியுள்ளார். உஷா எப்போதுமே இப்படி தான் போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக ஆடைகளை கழற்றி வீசுவதை வழக்கமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு முறையும் போலீசார் கைது நடவடிக்கை என்றாலே உஷா வேகமாக ஆடைகளை கழட்டி வீச ஆரம்பித்துவிடுவாராம். அதேபோல தான் இந்தமுறையும் செய்ததால், போலீசார் செய்வதறியாமல் திகைத்துள்ளனர். ஒருகட்டத்தில், உஷா அவரது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து தனக்குத்தானே உடம்பில் ஊற்றி கொண்டு, தீப்பெட்டியையும் கொளுத்தி கொண்டார்.

தற்கொலை செய்ய போவதாக மிரட்டியபோதுதான் உஷாவின் உடம்பில் தவறுதலாக தீப்பிடித்து கொண்டது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக உஷா மீது பற்றி எரிந்த தீயை அணைத்து, அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் உஷா மீது, 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரது கணவர் ரத்தினத்தையும் போலீசார் தேடி வருகின்றனர்.


Advertisement