பள்ளி கழிவறையில் திடீரென மயங்கி விழுந்த ஆசிரியர்..! நொடிப்பொழுதில் ஏற்பட்ட துயரச் சம்பவம்..!கதறும் மாணவர்கள்...

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கருமாபுரம் தென்சோலை பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் அங்குள்ள வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று சரவணன் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுள்ளார்.
இதற்கிடையில் கழிவறைக்கு சென்று விட்டு வருவதாக கூறிய சரவணன் நீண்ட நேரம் ஆகியும் வராத காரணத்தால் ஆசிரியர் ஒருவர் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது சரவணன் அங்கு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் உடனே அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சரவணன் ஏற்கனவே மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கதறி அழுதுள்ளனர். பள்ளியில் ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது