தொழில்துறையின் பெயரை மாற்றி அரசாணை வெளியீடு... தமிழ்நாடு அரசு..!

தொழில்துறையின் பெயரை மாற்றி அரசாணை வெளியீடு... தமிழ்நாடு அரசு..!



The Tamil Nadu government issued an ordinance to change the name of the industry..

தமிழ் நாடு அரசு தொழில்துறையின் பெயரை மாற்றி அரசாணை வெளியிட்டுள்ளது. 

சென்னை, தமிழக மனிதவள மேலாண்மை துறையின் செயலாளர் மைதிலி கே.ராஜேந்திரன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பது,

இதுவரை, தொழில் துறை என்று அழைக்கப்பட்டு வந்த அரசுத் துறை இனி தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை என்று அழைக்கப்படும். எனவே அதற்கு தகுந்தாற் போல், அரசு விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அரசானையில் கூறப்பட்டுள்ளது. 

தற்போது, தொழில் துறை அமைச்சராக இருந்து‌ வரும் தங்கம் தென்னரசு, இனி தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகம், தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.