ஆத்தாடி..! அடுத்தடுத்த வீடுகளில் ஆட்டையை போட்ட கொள்ளையர்கள்.. தஞ்சையில் பரபரப்பு..!
தஞ்சையில் அடுத்தடுத்த வீடுகளில் பீரோவை உடைத்து பணம் மற்றும் நகைகளை ஆட்டையை போட்ட கொள்ளையர்களின் துணிகர செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் பூக்கார தெருவில் வசித்து வருபவர் வினோத் என்கிற கோபாலகிருஷ்ணன். இவர் தனியார் இருசக்கர நிதி நிறுவன அதிபராக உள்ளார். வினோத் வீட்டை பூட்டி விட்டு ஒரு துக்க நிகழ்விற்காக சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவானது உடைகப்பட்டு பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனையடுத்து வினோத் உள்ளே சென்று பார்த்த போது பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த 41 பவுன் தங்க நகைகள் மற்றும் 5 லட்சம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும் அதே பகுதியை சேர்ந்த மகேஸ்வரி என்பவர் வீட்டிலும் பீரோவை உடைத்து தங்க நகைகள் மற்றும் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டில் பதிவாகியிருந்த தடைகளை சேகரித்தனர். மேலும் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்தக் கொள்ளை சம்பவமானது அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.