மனைவியை அடித்து நகையை பிடுங்கிய போலீஸ்காரர் சிறையில் அடைப்பு..!

ராமநாதபுரத்தில் மனைவியை தாக்கி நகை பறித்த வழக்கில் காவல் துறை கனகராஜ் சிறையில் அடைக்கப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகில் இருக்கும் கோடரியேந்தல் பகுதியில் வசித்து வருபவர் கனகராஜ். இவர் மதுரை பட்டாலியன் போலீசாக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி முருகவல்லி ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலைய ஏட்டாக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் கனகராஜ் முருகவள்ளியை தாக்கி அவர் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துச் சென்றுள்ளார். இது தொடர்பாக ராமநாதபுரம் நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். காவல்துறையினர், விசாரிக்க வருவதை கனகராஜ் தெரிந்து கொண்டார்.
எனவே, அவரை அவரது மனைவி குடும்பத்தினர் அடித்துவிட்டதாக கூறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை முடிந்து போலீஸ்காரர் கனகராஜ் இன்று நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின்படி ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.