படுத்து கொண்டே சிகரெட் பிடித்த முதியவர்..! பரிதாபமாக போன உயிர்.!

படுத்து கொண்டே சிகரெட் பிடித்த முதியவர்..! பரிதாபமாக போன உயிர்.!


the-old-man-died-who-smoked-cigarettes-while-lying-down

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் வேல்முருகன். 65 வயது நிரம்பிய இவர் தனது மகன் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டில் தனிமையாக இருந்த வேல்முருகன் படுக்கை அறையில் சிகரெட் பிடித்தபடி படுத்து இருந்துள்ளார். 

அப்போது வேல்முருகன் சிகரெட்டை சரியாக அணைக்காமல் கீழே போட்டுவிட்டு தூங்கியுள்ளார். அவர் தூங்கிய சிறிது நேரத்தில் அவர் படுத்திருந்த படுக்கையில் தீப்பிடித்து,கட்டிலில் இருந்த போர்வையின் மீது தீ பிடித்து எரிந்துள்ளது. இதில் கட்டிலில் படுத்திருந்த வேல்முருகன் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையறிந்த அப்பகுதியினர் தீயை அணைக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால்  தீயை அணைக்க முடியாததால் பரமக்குடி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வேல்முருகனின் உடலை மீட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  வேல்முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.