கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மனைவி.. பரபரப்பு சம்பவம்.!

கிருஷ்ணகிரி மாவட்டம் முதுகுறுக்கி கிராமத்தில் வசித்து வருபவர்கள் துர்கேஷ் - சோனியா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் துர்கேஷின் பக்கத்து வீட்டை சேர்ந்த நடராஜ் என்பவருடன் சோனியாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதனால் அவர்கள் இருவரும் தனிமை உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இவர்களது பழக்கமானது சோனியாவின் கணவர் துர்கேஷிற்கு தெரிய வரவே இருவரையும் கடுமையாக கண்டித்துள்ளார். இருந்தாலும் அவர்களது கள்ளத்தொடர்பானது நீடித்து கொண்டே இருந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த துர்கேஷ் தனது மனைவி சோனியாவை கடுமையாக தாக்கியுள்ளார். இதனையடுத்து நடந்தவற்றையெல்லாம் சோனியா நடராஜனிடம் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த நடராஜ் துர்கேஷை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று நடராஜ் தனது தம்பியான மது என்பவரை அழைத்துக் கொண்டு துர்க்கேஷின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கதவை திறந்து விட்ட சோனியா அவர்களை உள்ளே அழைத்துக் கொண்டு சென்று உறங்கிக் கொண்டிருந்த துர்க்கேஷை கொலை செய்யுமாறு கூறியுள்ளார்.
பின்னர் நடராஜ் தான் கொண்டு வந்திருந்த அரிவாளால் துர்கேஷை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனையடுத்து துர்க்கேஷின் அலரல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி துர்கேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.