உயிர் பிழைத்த மனைவி: காப்பாற்ற முயன்ற கணவரும், மகனும் பரிதாப பலி!.. சோகத்தில் மூழ்கிய கிராமம்..!

உயிர் பிழைத்த மனைவி: காப்பாற்ற முயன்ற கணவரும், மகனும் பரிதாப பலி!.. சோகத்தில் மூழ்கிய கிராமம்..!


the-husband-and-son-whom-the-surviving-wife-tried-to-sa

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகேயுள்ள சிறுபாக்கம் ஊராட்சியை சேர்ந்தவர் ராமர் (55). இவரது மனைவி பெரியம்மாள். இந்த தம்பதியினரின் மகன் மணிகண்டன் (30). பெரியம்மாள் நேற்று முன்தினம் இரவு துவைத்த துணிகளை காய வைப்பதற்காக வீட்டின் அருகே உள்ள் இரும்பு கம்பியாலான கொடியில் அவற்றை போட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக திடீரென கொடிக்கம்பியில் மின்கசிவு ஏற்பட்டு அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் அவர் கூச்சலிட்டார். அவரது கூச்சல் கேட்டு ஓடி வந்த அவரது கணவர் ராமர் மற்றும் மகன் மணிகண்டன் ஆகியோர் பெரியம்மாளை காப்பாற்ற முயற்சி செய்தனர். அப்போது அவர்களையும் மின்சாரம் தாக்கியது. இதன் காரணமாக மூவரும் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் மூவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர், சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராமர் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேல் சிகிச்சைக்காக முண்டியம் பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரியம்மாள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மனைவியை காப்பாற்ற முயன்ற கணவரும், தாயை காப்பாற்ற முயன்ற மகனும் பலியான சம்பவத்தால் சிறுபாக்கம் கிராமமே சோகத்தில் மூழ்கியது.