இந்தியா

ஆண் நண்பருடன் சேர்ந்து தந்தையிடம் கொள்ளையடித்த மகள்.! பதறிப்போன தந்தை!

Summary:

The daughter robbed to her father

மும்பையைச் சேர்ந்த உம்ரதரஷ் குரேஷி என்பவருக்கு 21 வயதில் உஷ்மா குரேஷி என்ற மகள் இருந்துள்ளார். இந்தநிலையில் கடந்த மாதம் ஜூலை 29 ஆம் தேதி வெளியில் சென்ற உஷ்மா குரேஷி அன்று வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றும் அரோரா என்பவருடன் தனது மகள் வீட்டை விட்டு
போயிருக்கலாம் என சநதேகம் ஏற்பட்டுள்ளது உம்ரதரஷ் குரேஷிக்கு.

இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் உம்ரதரஷ் குரேஷி. அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் உஷ்மா குரேஷியை தேடி வந்துள்ளனர். இந்தநிலையில் வீட்டின் லாக்கரில் இருந்த நகையும், ரூ.10 லட்சம் ரொக்கமும் காணாமல் போனது உம்ரதரஷ் குரேஷிக்கு தெரியவந்தது.

 உஷ்மா குரேஷி காணாமல் போனதற்கு முன்பு நகைகளை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றவுள்ளதாக லாக்கர் சாவியை தந்தையிடன் வாங்கியுள்ளார். அதனை நினைவுப்படுத்திய தந்தை இது குறித்து தன் மகள் மீது தான் சந்தேகம் உள்ளது என போலீசாரிடம் தெரிவித்தார். இந்தநிலையில் பஞ்சாபில் அவர்கள் இருப்பது
தெரியவந்தது. இதனையடுத்து பஞ்சாப் போலீசாரின் உதவியுடன் உஷ்மாவையும், அரோராவையும் கைது செய்தனர்.


Advertisement