மசாஜ் செய்ய மறுத்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

மசாஜ் செய்ய மறுத்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!


The cruelty to the woman who refused to give a massage

கோவை சிங்காநல்லூர் மசகாளிபாளையம் மேற்கு வீதியை சேர்ந்தவர் மினிமோள்(43). இவர் சூலூரில் மசாஜ் மசாஜ் சென்டர் நடத்திவருகிறார். கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்த இவர் சூலூரில் மசாஜ் சென்டர் வைத்து நடத்திவருகிறார்.

இந்நிலையில் மினிமோள் வீட்டில் இருந்தபோது, கௌசிக் என்பவரும் அவரது நண்பரும் மினிமோளின் வீட்டிற்கு சென்று, தங்களுக்கு மசாஜ் செய்து விட வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்கு மினிமோள், வீட்டில் வைத்து யாருக்கும் மசாஜ் செய்வதில்லை என்றும், சூலூர் மசாஜ் சென்டர்க்கு வந்தால் மசாஜ் செய்கிறேன் என்று சொல்லியுள்ளார். 

இதனால் அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கௌசிக்கும் அவருடன் வந்த வாலிபரும் மினிமோளை தாக்கியுள்ளனர். மேலும் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மினிமோளை குத்தினர். இதில் மினிமோளுக்கு தலை கை பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. மினிமோலின் அலறல் சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தனர்.

இதற்கிடையில் கௌசிகம் அவரது நண்பரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மினிமோளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் சிங்கநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய கௌசிக்கையும் அவரது நண்பரையும் தேடி வருகின்றனர்.