கரப்பான் பூச்சி பிரியாணியா.?! சாப்பிடும் போது அதிர்ச்சி.. அதிகாரிகள் அதிரடி.!

கரப்பான் பூச்சி பிரியாணியா.?! சாப்பிடும் போது அதிர்ச்சி.. அதிகாரிகள் அதிரடி.!


the-cockroach-in-the-biryani-caused-a-stir-in-dindigul

திண்டுக்கல் மாவட்டம் முத்தழகு பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த விமல் என்ற நபர் தன்னுடைய உறவினரோடு திண்டுக்கல்லிலுள்ள ஒரு பிரபல பிரியாணி கடைக்கு சென்று பிரியாணி வாங்கியிருக்கிறார். அவர்கள் அந்த பிரியாணியை  சாப்பிட முயன்றபோது, அந்த பிரியாணியில் கரப்பான் பூச்சி கிடந்ததாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கடை நிர்வாகத்திடம் கேள்வியெழுப்பியபோது சரியாக பதிலளிக்காததாக சொல்லப்படுகிறது.

dindukkal

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ஆகவே இந்த விவகாரம் பூதாகரமானதை தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து, உணவு பாதுகாப்பு துறை  அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆகவே அந்த பிரியாணி கடையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது உணவு தயாரிக்கப்படுமிடம் தரமற்றதாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

dindukkal

இதனைத் தொடர்ந்து,உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் அந்த கடை நிர்வாகத்திற்கு 4000 ரூபாய் அபராதம் விதித்திருக்கிறார்கள். மேலும் பிரியாணி தயார் செய்வதற்கான மூலப் பொருட்கள் அனைத்தையும் பகுப்பாய்வுக்காக சென்னை கிண்டியிலிருக்கின்ற ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.