தலிபான்களுக்கு தமிழகத்தில் இருந்து ஆதரவா.? உளவுத்துறைக்கு அனுப்பப்பட்ட விவரங்கள்.!

தலிபான்களுக்கு தமிழகத்தில் இருந்து ஆதரவா.? உளவுத்துறைக்கு அனுப்பப்பட்ட விவரங்கள்.!


The Central Intelligence Agency is collecting details of supporters of the Taliban

தமிழகத்தில் தலிபான்களுக்கு ஆதரவாக சமூகவலைத்தளங்களில் பதிவுகளை வெளியிடுபவர்களின் விவரங்களை மத்திய உளவுத்துறை போலீசார் சேகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுவதுமாக கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் தலிபான்களுக்கு பயந்து வெளிநாட்டவர்களும், சொந்த நாட்டவர்களுமே நாட்டை விட்டு வெளியேற முயற்சித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் பெரும்பகுதியை தலிபான்கள் கைப்பற்றிவிட்ட நிலையில் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி மற்றும் துணை அதிபர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.

இந்தநிலையில், தமிழகத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தலிபான்களை சமூக வலைதளங்களில் பின் தொடர்வதாக கூறப்படுகிறது. இப்படி பின் தொடர்ந்து தலிபான்களுக்கு ஆதரவாக பதிவிடுபவர்களின் விவரங்களை மத்திய உளவுத்துறை போலீசார் டெல்லிக்கு அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விவரங்களின் அடிப்படையில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் குறித்து விசாரணை நடத்துமாறு டெல்லியில் இருந்து தமிழக உளவுத் துறையினருக்கு உத்தரவு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.