மிதிவண்டி ஓட்டுவதால் இவ்ளோ நன்மைகளா! இனி சைக்கிளிலேயே பயணிக்கலாமோ.!

மிதிவண்டி ஓட்டுவதால் இவ்ளோ நன்மைகளா! இனி சைக்கிளிலேயே பயணிக்கலாமோ.!


the best - simple - excersise - cycling treatment

1970-80 காலகட்டங்களில் மக்களின் பிரதான வாகனம் என்றால் அது, மிதிவண்டி (சைக்கிள்) என்பதை யாராலும் மறுக்க முடியாது. அப்பொழுதெல்லாம் பெரும்பாலும் மக்கள் நடைபயணமாகத்தான் பயணங்களை மேற்கொண்டனர். அப்போது வீட்டிற்கு ஒரு மிதிவண்டி என்பதே பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. மிதிவண்டி வைத்திருப்பவர்கள் வசதியானவர்கள் என்ற எண்ணமும் நிலவிய காலம் அது. 

காலப்போக்கில் மக்களின் வாழ்க்கை முறையில் விரைவு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. மேலும் பெருகி வந்த மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத்தது. இதனால் மக்கள் மத்தியில் மிதிவண்டியின் செயல்பாடு படிப்படியாக குறையத் தொடங்கியது. அதேவேளையில் மக்களுக்கு ஏற்படும் வியாதிகளும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

exercise

தற்போது மிதிவண்டியின் பயன்பாடு சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னை போன்ற பெரு நகரங்களில் கூட உடற்பயிற்சிக்காகவாவது மக்கள் மிதிவண்டியை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்நிலையில் மிதிவண்டியை இயக்குவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகிறது என்பது குறித்து பார்க்கலாம்.

உடற்பயிற்சி நிபுணர்களின் கூற்றுப்படி, சைக்கிள் ஓட்டுவது உடலுக்கு மட்டுமல்ல, மனதுக்கும் நலம் பயக்கிறது. சுவாரசியமான, அதிக கஷ்டமில்லாத உடற்பயிற்சியாக இருக்கிறது. சைக்கிள் ஓட்டம் மனஅழுத்தம், படபடப்பைக் குறைக்கிறது. பிற உடற்பயிற்சி சாதனங்களுடன் ஒப்பிடும்போது இதில் காயமடையும் வாய்ப்பும் குறைவாக இருக்கிறது. உடம்பின் கீழ்ப்பகுதி தசைகளை வலுப்படுத்துகிறது.

exercise

நமது ஒட்டுமொத்த சக்தியையும் வலுவையும் அதிகரிக்கிறது. உடம்பின் சீர்நிலை, ஒருங்கிணைக்கும் திறனை மேம்படுத்து கிறது. மனஅழுத்தத்தைத் துரத்த உதவுகிறது. மனஅழுத்தத்துக்குக் காரணமான ஹார்மோனாகிய ‘கார்ட்டி சோலின்’ அளவைக் குறைக்கிறது. உடல் பருமனுக்குத் தடை போடுகிறது. மூட்டு பிரச்னைகள் ஏற்படாமல் காக்கிறது.