தயாரிப்பாளர் சங்க பிரச்சனை: நடிகர் விஷால், மன்சூர் அலிகான் அதிரடி கைது.!thayarippalar-sangam---actor-vishal-and-massor-arrest

தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு எதிர்த்தரப்பினரால் போடப்பட்ட பூட்டை உடைக்க முயன்ற நடிகர் விஷால், மன்சூர் அலிகான் மற்றும் விஷால் ஆதரவாளர்களை தி. நகர் போலீசாரால் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள எதிர்த்தரப்பினர் பொதுக்குழுவை கூட்டி முடிவு எடுக்காமல் விஷால் தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி தேனாம்பேட்டை மற்றும் அண்ணா சாலையில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்தின் அலுவலகத்திற்கு நேற்று பூட்டு போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Actor vishal

அதை தொடர்ந்து எதிரணியில் உள்ள ஜே.கே. ரித்தீஷ், தயாரிப்பாளர் சுரேஷ் கமாட்சி, ராதாகிருஷ்ணன் இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் தலைமையில் தமிழக முதல்வரை இன்று சந்தித்து பேசினர்.

நேற்று எதிர்தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு பூட்டு போட்டதால் இன்று பிரச்சனை உருவாகும் என்பதால் தேனாம்பேட்டை மற்றும் அண்ணா சாலையில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Actor vishal

இந்நிலையில் எதிர்பார்த்ததைப் போலவே இன்று காலை 11 மணியளவில் தேனாம்பேட்டை சங்க அலுவலகத்திற்கு வந்த நடிகர் விஷால் தலைவர் நான் இருக்கும் போது என் அலுவலகத்திற்கு யார் பூட்டு போடுவது என்று கூறியவாறு பூட்டை உடைக்க முயன்றார்.

ஆனால் காவலர்கள் பதிவாளரிடம் இருந்து சாவியை பெற்று வந்து அலுவலகத்தை திறக்குமாறு விஷாலிடம் கூறினர். ஆனால் பூட்டை உடைப்பதிலையே பிடிவாதமாக இருந்ததால் விஷால், நடிகர் மன்சூர் அலிகான் மற்றும் விஷால் ஆதரவாளர்கள் சிலரை கைது செய்த தி.நகர் போலீசார் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.