தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. அசத்தல் அழகு.! இளசுகளை சொக்கி இழுக்கும் நடிகை பிரியா வாரியர்.!
முன்விரோதத்தில் அடித்தே படுகொலை.. தஞ்சாவூர் அருகே பதறவைக்கும் சம்பவம்.!

ஆடிட்டர் ஒருவரை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக தாக்கி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் நேற்றிரவு ஆடிட்டர் மகேஸ்வரன் என்பவர் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு புகுந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை தாக்கியுள்ளது.
மேலும், அதோடு நிறுத்திக் கொள்ளாமல் அந்த மர்ம கும்பல், கையில் வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு தப்பிசென்றுள்ளது. பின் இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் மகேஸ்வரனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
அத்துடன் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில், சேர்வைக்காரன் தெருவில் வசித்து வந்தவர் மகேஷ்வரன் என்பதும், இவர் அதே பகுதியில் உள்ள மாநகராட்சி கழிவறையை ஏலத்தில் எடுத்ததால் இவருக்கும், கார்த்திக் என்பவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக கார்த்திக் தான் கொலை செய்தார் என்று உறுதி செய்யப்படாத நிலையில், அவர் மீது சந்தேகம் எழுந்து தற்போது காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.