#Breaking: தஞ்சாவூர் அப்பர் கோவில் திருவிழா விபத்து.. தஞ்சை விரைகிறார் தமிழக முதல்வர்..!



thanjavur Appar temple Accident TN CM MK Stalin Went to Thanjavur Kalimedu

தஞ்சாவூர் மாவட்டம் களிமெடு கிராமத்தில் உள்ள அப்பர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்ற நிலையில், தேரில் மின்சாரம் பாய்ந்து மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளளனர். தொடர்ந்து காயமடை ந்த 15 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து தஞ்சாவூரில் தேர் விபத்தில்  காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் செல்ல இருக்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலமாக திருச்சி சென்று அங்கிருந்து தஞ்சை செல்கிறார்.

மேலும், காயமடைந்த 15 பேருக்கும் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் மருத்துவர்களிடம் பரிந்துரைத்துள்ளார். அத்துடன் தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். 

தேர் திருவிழாவில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த நிலையில், உயிரிழந்தவர்களை இன்று நேரில் சந்திக்க இருக்கிறார்.