ஈரோட்டில் பயங்கரம்.. நேருக்கு நேர் லாரிகள் மோதி கோர விபத்து..!

ஈரோட்டில் பயங்கரம்.. நேருக்கு நேர் லாரிகள் மோதி கோர விபத்து..!


terrible-in-erode-head-to-head-collision-of-trucks

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பண்ணாரி அருகே ராஜன் நகரிலிருந்து லாரி ஒன்று லோடு ஏற்றிக்கொண்டு வேலுர் நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை பரமேஸ்வரன் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

இந்த லாரியானது பெருமுகை தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் வந்த போது இதன் எதிர் திசையில் திடீரென வந்த தங்கவேல் என்பவர் ஓட்டி வந்த லாரி பரமேஸ்வரன் ஓட்டி வந்த வந்த லாரியின் மீது நேருக்கு நேர் மோதியது.

Road accident

இந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்களும் பலத்த காயமடைந்தனர். இச்சம்பவத்தை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுக்குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்துக்குள்ளான லாரிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.