தென்காசி சார்பதிவாளரின் சொத்து நகை பறிமுதல்.. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை.!

தென்காசி சார்பதிவாளரின் சொத்து நகை பறிமுதல்.. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை.!


tenkasi-deputy-registrars-property-and-jewelery-confisc

நாகர்கோவில் சைமன் நகரைச் சேர்ந்த தாணுமூர்த்தி தென்காசி மாவட்டம் ஊத்துமலையில் சார் பதிவாளராகப் தற்போது பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் இதற்கு முன்னால் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றினார் என்று தெரிகிறது.

அப்போது தாணுமூர்த்தி மீது புகார் வந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் கூடுவாஞ்சேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் டிசம்பர் 15, 2020-ல் சோதனை நடத்தினர். இதில் சார்பதிவாளர் தாணுமூர்த்தி கேபினில் ரூ.11.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து அவரது வீட்டில் நடத்திய சோதனையில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் 100 சவரன் நகைகளை கைப்பற்றினர்.

Deputy registrarDeputy registrar

இதனை தொடர்ந்து தாணுமூர்த்தி தென்காசி மாவட்டம் ஊத்துமலை சார் பதிவாளராக பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இப்போது சார் பதிவாளர் தாணுமூர்த்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார் என்று செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் நாகர்கோவில் சைமன் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் பெஞ்சமின் தலைமையிலான போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இதில் ரூ.19.70 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைரம் மற்றும் ஆடம்பர பொருட்கள் வாங்கியதற்கான ரசீதுகள் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.