சிக்கிய கோவில் குருக்கள்.! கோயில் கருவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருள்..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!Temple priest arrested for hoarding idols

சீர்காழியில் பல ஆண்டுகளாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பஞ்சலோக சுவாமி சிலை மற்றும் வெள்ளிப் பொருட்களை போலீசார் மீட்டு, பதுக்கிய குருக்களை கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே, மன்னங்கோவில் கிராமத்தில், மன்னார்சாமி, நல்ல காத்தாயி கோவில் உள்ளது. இக்கோவிலில், 40 ஆண்டுகளுக்கு முன், பஞ்சலோக சுவாமி சிலைகள் காணாமல் போனது. இதுதொடர்பாக ஏனாக்குடி கிராமத்தைச் சேர்ந்த நபர் மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

இது குறித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில் வேறு கோவிலில் இருந்து 2 சிலைகளை மீட்டனர். அந்த 2 சிலைகளை கோவில் கருவறையில் குருக்கள் சூர்யமூர்த்தி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 2 சிலைகளும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் குருக்கள் சூர்யமூர்த்தியை கைது செய்தனர்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கோவில் சாமி சிலைகளை ரூ.2 கோடிக்கு விற்கும் முயற்சியில் சூர்யமூர்த்தி கோவில் கருவறையில் பதுக்கி வைத்தது அம்பலமாகியுள்ளது.