திடீரென கதவில் தொங்கிய மாலை, கண்ணீர் அஞ்சலி போஸ்டர்..! கன்னியாகுமரியில் நள்ளிரவில் மர்மநபர்கள் செய்த வேலை.!

திடீரென கதவில் தொங்கிய மாலை, கண்ணீர் அஞ்சலி போஸ்டர்..! கன்னியாகுமரியில் நள்ளிரவில் மர்மநபர்கள் செய்த வேலை.!


Tearful tribute poster for closed ATM center

பல நாட்களாக மூடிக்கிடந்த ஏடிஎம் மையத்திற்கு மர்ம ஆசாமிகள் மாலை அணிவித்து, கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது.

கன்யாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் என்னும் பகுதியில் IOB வங்கியின் ஏடிஎம் மையம் ஒன்று இயங்கிவந்துள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் அந்த பகுதியை சுற்றியுள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பணம் எடுப்பதற்கு பயன்படுத்திவந்துள்ளனர். ஆனால், கொரோனா தொற்று பரவ தொடங்கிய சில நாட்களில் இந்த ஏடிஎம் மையம் மூடப்பட்டுள்ளது.

இதனால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இந்த ஏடிஎம் மையம் பூட்டப்பட்டு செயல்படாமல் இருந்து வருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் பணம் எடுப்பதற்கு நீண்டதூரம் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மீண்டும் ஏடிஎம் மையத்தை செயல்முறைக்கு கொண்டுவருவது குறித்து வங்கி கிளை மேலாளரிடம் மக்கள் பலமுறை கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படுகிறது.

ATM

ஆனால் அதிலும் எந்த பலன் இல்லை. இந்நிலையில் இரவு நேரத்தில் ஏடிஎம் மையத்திற்கு சென்ற சில மர்ம நபர்கள் ஏடிஎம் இயந்திரத்திற்கு மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏற்றி, வெளியே கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டர் ஒட்டியுள்ளனர்.

காலையில் இதனை பார்த்த மக்கள் இதுகுறித்து பரவலாக பேச தொடங்கியுள்ளனர். மேலும், மீட்டும் ஏடிஎம் மையத்தை திறக்கவேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற தொடங்கியுள்ளது.