தமிழகம்

சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது! எப்போதிலிருந்து தெரியுமா?

Summary:

tasmak will open in chennai

கொரோனா பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகள் தமிழகம் முழுவதும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பின் கட்டுப்பபாட்டு பகுதிகள் மற்றும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர மற்ற இடங்களில் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் இருந்து டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டது.

இந்தநிலையில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை மறுநாள் ஆகஸ்ட் 
18 ஆம் தேதி செவ்வாய்கிழமை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் எனவும், ஒரு கடையில் ஒரு நாளைக்கு 500 டோக்கன்கள் மட்டும் வழங்கப்படும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. மால்கள், மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கும் மதுபான கடைகள் இயங்காது எனவும், மது வாங்க வருபவர்கள் முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


Advertisement