
tasmac rate increased
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபானங்களின் விலை இன்று முதல் (வெள்ளிக்கிழமை) உயருகிறது.
டாஸ்மாக் கடைகளில் மதுபான விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. தமிழகம் முழுவதும் 5,300 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளை தமிழக அரசாங்கமே நடத்தி வருகிறது. இந்த நிலையில், அனைத்து மதுபானங்களின் விலையும் உயர்த்தி நேற்று வியாழக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து மதுபான விலை உயர்வானது வெள்ளிக்கிழமை (பிப். 7) இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி டாஸ்மாக்கில் குவார்ட்டர், பீர் விலை தலா ரூ.10 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.2200 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு ரூ.31 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த மதுபான விலை உயர்வு மது பிரியர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என கூறுகின்றனர் மது பிரியர்கள்.
Advertisement
Advertisement