மதுபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்..! ஏப்ரல் 4-ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..!!

மதுபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்..! ஏப்ரல் 4-ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..!!


tasmac-april-4th-date-closed-mahavir-jayanti

 

மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள் மூடப்படுகிறது.

இந்தியாவில் மகாவீர் ஜெயந்தி என்பது மத்திய-மாநில அரசு சார்பில் சிறப்பிக்கப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். இதனால் இந்நாளில் அரசு மற்றும் தனியார் மதுபானக்கடைகள் செயல்பட தடை விதிக்கப்படும்.

அந்த வகையில், ஏப்ரல் மாதம் 4ம் தேதி மகாவீர் ஜெயந்தி அனுசரிக்கப்படவுள்ள நிலையில், அன்றைய நாளில் மதுபானக்கடைகளை மூடுவதற்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Mahavir Jayanti

அதேபோல, சென்னை மட்டுமல்லாது நாமக்கல் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திலும் அன்றைய நாளில் மதுபான கடைகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி மாவட்டங்களின் எண்ணிக்கை வரும் நாட்களில் உயரலாம்.