ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
தமிழா தமிழா நிகழ்ச்சியில் இறந்தவரை அரங்கத்தில் வரவழைத்த பெண்! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்! வைரலாகும் வீடியோ...
பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான தமிழா தமிழா தற்போது தொடர்ச்சியாக விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த வாரம், "இறந்தவர்களுடன் பேச முடியுமா?" என்ற சுவாரசியமான தலைப்பில் விவாதம் நடைபெற்றது.
நிகழ்ச்சியை ஆவுடையப்பன் தொகுத்து வழங்க, நிகழ்ச்சியின் மையக்கருத்து, இறந்த ஆத்மாக்களுடன் தொடர்பு கொள்ள முடியுமா என்பது குறித்து இரண்டு தரப்புகளுக்கு இடையே உரையாடல் நடைபெற்றது. ஒரு தரப்பு இதனை நம்புவோர், மற்றொரு தரப்பு அதனை முற்றிலும் நிராகரிப்போர் எனப் பிரிந்தது.
விவாதத்தின் போது, ஒரு பெண், இறந்தவரின் ஆவியை அரங்கத்திற்குள் வரவழைக்கக் கூடிய தன்மை உண்டெனக் கூறி அதனை நேரில் செய்து காட்டினார். ஒரு நபர் தேங்காய் மீது அமர வைத்து, அவரின் வாயிலாக இறந்தவருடன் பேசியதாக கூறிய காட்சி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதையும் படிங்க: இரவில் ரோகிணியிடம் தனியாக போய் பேசும் க்ரிஷ்! ரோகிணி தான் அம்மா என அறிவாளா மீனா! சிறகடிக்க ஆசை பரபரப்பான ப்ரோமோ...
அந்த பெண், “நீங்கள் பிளாக் மேஜிக் காரணமாகவே இறந்திருக்கிறீர்கள்... விரைவில் அதிலிருந்து வெளியே வாருங்கள்” என கூறியதும், தேங்காய் மீது அமர்ந்திருந்த நபர் திடீரென கீழே இறங்கினார். இதனை பார்த்த எதிர்ப்பாளர்கள் பல கேள்விகளை எழுப்பினர்.
இந்த நிகழ்வு, ஒட்டுமொத்த ரியாலிட்டி ஷோ ரசிகர்களிடையே வியப்பையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நீயா நானா போன்ற நிகழ்ச்சிகளின் வெற்றியை தொடரும் வகையில், தமிழா தமிழா நிகழ்ச்சியும் புதிய கோணங்களில் விவாதங்களை நிகழ்த்தி வருகிறது.