ஒரே மாதத்தில் 20 கிலோ எடை குறைவு..! என்னை எப்படியாவது என் அம்மாகிட்ட சேத்துருங்க..! கல்நெஞ்சையும் கறையவைக்கும் இளைஞன்..!



Tamilnadu youth in dubai wants to return india

துபாயில் சிக்கியிருக்கும் தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர்  தான் இறந்தபிறகாவது எனது உடலை சொந்த ஊருக்கு கொண்டுசெல்லுங்கள் என உருக்கத்துடன் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.

தேனி மாவட்டம் போடி பகுதியை சேர்ந்த கணேஷ் குமார் என்ற இளைஞர் கடந்த ஜனவரி மாதம் வேலை தேடி துபாய்க்கு சென்றுள்ளார். போன இடத்தில் வேலை கிடைக்கவில்லை, அதேநேரம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் வேலையும் தேட முடியாமல் தனது நண்பர்களுடன் தங்கியுள்ளார் கணேஷ்.

lockdown

இந்நிலையில் சதிஷ்கு திடீரென மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டநிலையில் புற்றுநோய் அறிகுறியும் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த நோயினால் ஒரே மாதத்தில் கணேஷ் 20 கிலோ எடை குறைந்துள்ளார். மேலும் உணவு எதுவும் சாப்பிட முடியவில்லை எனவும், எதை சாப்பிட்டாலும் வாந்தி வருவதாகவும் கூறியுள்ள கனனேஷ் தனது நிலையை இந்திய தூரகத்துக்கு எடுத்து சொல்லியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என கூறியுள்ளார்.

எப்படியாவது என்னை தனது அம்மாவிடம் சேர்த்துவிடும்படியும், அவர் என்னை பார்த்துக்கொள்வார் எனவும் கூறும் கணேஷ், ஒருவேளை நான் இங்கையே இறந்துவிட்டால் தனது உடலையாவது தனது சொந்த ஊருக்கு கொண்டுசெல்ல உதவுங்கள் என கூறியிருப்பது கல் நெஞ்சையும் கறையவைக்கும் விதமாக உள்ளது.

தங்கள் மகனின் நிலையை அறிந்த பெற்றோர் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். ஆட்சியர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.